தமிழ்நாடு தவ்ஹீத்மா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் தாயீகள் சிலர், அவர்களின் இல்லத்தில் நடைபெறும் நபிவழித் திருமணத்தில் தடுமாற்றம் அடைகிறார்கள். அதற்கு TNTJ கடினமான நிபந்தனைகள் காரணமா.?
- புரைதா N ஷாஹீர், தஞ்சை
மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பித்அத்தான காரியங்கள் நடக்கும் திருமணங்கள் விஷயத்தில் எந்தத் தடுமாற்றமும், குழப்பமும் யாருக்கும் இல்லை.
ஆனால் குறைந்த செலவில் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே சிலருக்கு தடுமாற்றம் உள்ளது. குறைந்த செலவு எது என்பதிலும் மிகச் சிலருக்கு குழப்பம் இருப்பதை நாம் அறிகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் இது குறித்த கருத்துக்களை கேட்டுள்ளோம். பல மாவட்டங்களில் கருத்துக்கள் அனுப்பி உள்ளார்கள்.
அக்கருத்துக்க்ளைத் தொகுத்து அறிஞர் குழுவில் விவாதித்து யாருக்கும் குழப்பம் வராத வகையிலும் மார்க்கத்தில் கடுகளவும் சமரசம் செய்யாத வகையிலும் எத்தகைய முடிவை எடுப்பது என்று முடிவு செய்து விரைவில் அறிவிப்போம். இன்ஷா அல்லாஹ்
நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை தான். அதிகமான மக்கள் கடும் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு நடந்தாலும் சிலர் தடுமாற்றம் அடைகிறார்கள்
-உணர்வு வார இதழ்
No comments:
Post a Comment