அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது ஜமாஅத்தின் தஃவா பணியை செம்மைப்படுத்த வேண்டுமெனில் ஜமாஅத்தின் முக்கிய அங்கங்களாக திகழும் பேச்சாளர்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட பேச்சாளர் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனினும் சில மாவட்டங்கள் தன்னிச்சையாக தங்களிடம் உள்ள தாயிக்களை கொண்டே மாவட்ட பேச்சாளர் பயிற்சியை நடத்தி கொள்வதாக அறிகிறோம். அது குறைந்த பலனையே தருவதால் இனி மாவட்டங்கள் அவ்வாறு நடத்தக் கூடாது என்று தலைமை அறிவுறுத்துகிறது.
மாவட்ட தாயி பயிற்சி என்பது தலைமை அனுப்பும் தாயிக்களை கொண்டு தான் நடத்தப்பட வேண்டும்.
மேலும் மாவட்ட பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் வகையில்
முப்பது பேச்சாளர்களுக்கும் அதிகமாக உள்ள மாவட்டங்கள் முறைப்படி தலைமையிலிருந்து தாயிக்களை பெற்று பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.
முப்பது பேச்சாளர்களுக்கும் குறைவாக இருக்கும் மாவட்டங்கள் தனியாக பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தாமல் அவர்களது பயிற்சி குறித்து மாநிலத் தலைமைக்கு தெரிவித்து அனுமதி கோரினால் அருகாமையில் உள்ள நான்கைந்து மாவட்டங்களை தேவைக்கேற்ப ஒன்றிணைத்து தகுந்த முறையில் பிற மாவட்டங்களுடன் இணைந்து அந்நிகழ்ச்சியை நடத்த மாநிலத் தலைமையகம் வாயிலாக அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும், அதுவே நிகழ்ச்சியின் நோக்கம் பரிபூரண வகையில் நிறைவேற வழிவகுக்கும் என்பதை அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தும் மாவட்டங்கள் மேற்கண்ட ஒழுங்குமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment