தலைமை சுற்றறிக்கை எண் :143/2017 . தேதி :24.10.2017
கண்ணியத்திற்குரிய மாவட்டத் தலைவர் & நிர்வாகிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
உறுப்பினர் அட்டை பற்றிய அறிவிப்பு:
அஸ்ஸலாமு அலைக்கும்
உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் அட்டையில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளோம்.
இன்று அரசு நிறுவனங்களும், பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தமது அடையாள அட்டைகளை QR கோடு உடன் .
அதை ஸ்கேன் செய்வதன் மூலம் உறுப்பினர் பற்றிய விபரங்களை கணிணியில் பார்த்து உறுதி செய்ய முடியும். இதில் இன்னும் பல நன்மைகள் உள்ளன.
நமது உறுப்பினர் அட்டையும் இனிமேல் QR கோடு உடன் இப்போது உள்ளதை விட சிறந்த தரத்துடனும் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் நடைமுறையும் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு ஜனவரியிலும், இன்னொருவருக்கு பிப்ரவரியிலும் இப்படி பல்வேறு மாதங்களில் உறுப்பினர் அட்டை காலாவதியாகும் நிலை உள்ளது.
தமது உறுப்பினர் அட்டை எப்போது முடிகிறது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் வைக்க முடியாத நிலை உள்ளது.
இனிமேல் அனைத்து உறுப்பினர் அட்டைகளும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.
உறுப்பினராக விண்ணப்பம் செய்பவர் ஜனவரி முதல் ஜூன் மாதத்துக்குள் விண்ணப்பித்தால் அந்த ஆண்டு டிசம்பர் 31 உடன் அட்டை காலாவதியாகும்.
ஜூன் மாதத்துக்குப் பின் விண்ணப்பம் செய்தால் அவர்களின் அட்டை அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி காலாவதியாகும்.
அனைவருக்கும் ஒரே நாளில் உறுப்பினர் அட்டை முடிவடைவதாக இருந்தால் அவர்கள் அனைவரும் அல்லது பெருவாரியான மக்கள் ஒரே நாளில் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
பல வகையில் ஜமாஅத்திற்கும் இந்நடைமுறை நன்மையாக அமையும் என்று கருதி இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.
தற்போது உறுப்பினராக உள்ள அனைவரின் கார்டுகளும் டிசம்பருடன் காலாவதியாகும் என்பதால் பழைய உறுப்பினர்களும் உடனே புதிப்பித்து கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய கார்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பழைய அட்டையை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்

No comments:
Post a Comment