தயார் நிலையில் இருங்கள்!!! தொண்டரணியினருக்கு மாநிலத் தலைமையின் அன்பான வேண்டுகோள்.
அன்பான கொள்கைச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.மழை என்பது எல்லாம்வல்ல இறைவனின் அருட்கொடை.எனினும் அதிலும் பல சோதனைகளை உண்டாக்கி, அதன் மூலம் நமக்குப் படிப்பினைகளையும், நன்மைகளையும் அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.இதை சென்ற ஆண்டு சென்னை,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட, புயலும் மழையும் நமக்கு உணர்த்தின.
இதனிடையே சிலதினங்களுக்கு முன்பு ‘வர்தா’ புயல் உருவானது.இது அதி தீவிரப் புயலாக மாறி சென்னை,காஞ்சிபுரம்,புதுவை,திருவள்ளூர்,கடலூர் ஆகிய பகுதிகளைத் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக,வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே நமது ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவும்.
அவ்வாறு தங்கள் பகுதியில்,புயல் மற்றும் மழையால் பெரும் சேதங்கள் ஏற்படுமானால்; தொண்டரணியினர் உடனடியாகக் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
மாநிலப் பொதுச் செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
மு.முஹம்மது யூசுப்
மாநிலப் பொதுச் செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
ஊடகத் தொடர்பு. 9789030302
No comments:
Post a Comment