News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, November 1, 2016

போபாலில் நடந்த போலி எண்கவுண்டர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்


01.11.2016
*போபாலில் நடந்த போலி எண்கவுண்டர்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.*
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 8 முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இது காவல் துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி எண்கவுண்டர் என ஊடகங்களில் வரக் கூடிய தகவல்கள்உறுதிபடுத்துகின்றன.
தப்பியோடிய கைதிகள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.ஆனால் மத்தியப்பிரதேச அரசோ அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த முரண்பாடான தகவல்கள் பலசந்தேகங்களை எழுப்புகின்றன.
மேலும் என்கவுண்டர் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.அதில் அந்தஇளைஞர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதும் மிக அருகில் வைத்தே அவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதும் தெளிவாகத் தெரிகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.அதில் அவர்கள்அனைவரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இச்சூழலில்தான் என்கவுண்டர்நடைபெற்றுள்ளது.
இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த என்கவுண்டர் திட்டமிட்டப் படுகொலைதான் என்பதுஊறுதியாகின்றது.
முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக்கண்டிக்கின்றது. இது தொடர்பாக முறையான நீதி விசாரணை செய்து, தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியப் பிரதேச அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஊடக தொடர்பு-
..9789030302

No comments:

Post a Comment