முக்கிய அறிவிப்பு :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய ஆய்வு முடிவு என்ற பெயரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தொலைபேசி எண்களுடன் ஒரு பொய்யான செய்தியை வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் வாயிலாக சில குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர்.
திருக்குர்ஆன் வசனங்களில் இடைச்செருகல்கள் இருக்கின்றதா என தவ்ஹீத் ஜமாஅத் ஆய்வு செய்து வருவதாக அந்த அவதூறு செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும்
ஹஜ் கடமைகளில் ஷைத்தானுக்கு கல் எறியக்கூடாது;
ஸஃபா மர்வா தொங்கோட்டம் ஓடக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்ததாக பரப்பப்படும் அந்த பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.
தவ்ஹீத் ஜமாஅத் தின் பெயரில் ஏதேனும் அறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்தால்
நமது அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கமான
www.facebook.com/ThouheedJamath/ என்ற முகவரியிலோ
அல்லது
www.Onlinepj.com என்ற நமது இணையதளத்திலோ
அல்லது
tntj.net என்ற நமது இணையதளத்திலோ சென்று பார்த்து அது நம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தானா என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இவண்,
மாநில தலைமையகம்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment