ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்திற்க்கு....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!
இஸ்லாத்தின் கடைமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றிட எப்படியாவது மக்கா என்னும் புனிதத் தலம் சென்றுவிட வேண்டும் என்று எண்ணுவோரை மையப்படுத்தி இயன்றவரை கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன சில டிராவல்ஸ் நிறுவனங்கள்.
கடைசி நேரத்தில் இந்த வருடம் உங்களுக்குப் பயணம் கிடையாது என்று கை விரிப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பின்னர் பணத்தைத் திருப்பித்தர இழுத்தடிப்பது அடுத்த கட்டமாகும்.
இந்த விவகாரத்தில் பயணத்திற்கான விசாவிலும் குளறுபடி செய்யப்படுகிறது என்று இப்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் பயணத்திற்கான விசாவிலும் குளறுபடி செய்யப்படுகிறது என்று இப்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
டூரிஸ்ட் விசா போன்று ஏதோ ஒரு விசாவில் ஹஜ் பயணிகளை அனுப்பி வைத்து, சவூதியில் அவர்களைத் திண்டாட வைத்துவிடுகின்றன சில மோசடி நிறுவனங்கள்.

வேறு வகையான விசா பெற்று பயணிப்பது கடும் சிரமத்தையும் பல சட்ட சிக்கல்களையும் உருவாக்கும் என்பதை மனதில் நிறுத்தி, எச்சரிக்கையுடன் செயல்பட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
முறையாக மத்திய அரசிடம் பதிவு செய்துள்ள நிறுவனமா என்று ஆய்வு செய்து பின்னர் முறையான விசாதானா என்பதையும் ஆராய்ந்து பயணம் மேற்கொள்வதே ஹஜ் செய்யவிருப்போருக்கு பாதுகாப்பாகும்.
எனவே மோசடி நிறுவனங்களைக் கண்டறிந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு;
எம். முகம்மது யூசுஃப்
(பொதுச் செயலாளர்)
எனவே மோசடி நிறுவனங்களைக் கண்டறிந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு;
எம். முகம்மது யூசுஃப்
(பொதுச் செயலாளர்)
No comments:
Post a Comment