News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Tuesday, December 2, 2014

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு - பகுதி 1

ஆன்லைன் பிஜெ இணையதலதிளிருந்து

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! இந்தத் தவறான சிந்தனையைக் களைந்து, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்பதை நிறுவுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்திலும், புதுவை, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
வீரியமிகு இந்தப் பிரச்சாரம் பிற சமுதாயங்களிடம் வேகமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது.
"முஸ்லிம்கள் தீவிரவாதிகள்' என்ற கருத்தைப் போலவே "இந்தியாவில் முஸ்லிம்கள் அந்நியர்கள்' என்ற விஷக்கருத்தும் திட்டமிட்டு, ஒரு சில தீய சக்திகளால் பரப்பப்படுகின்றது.
முஸ்லிம்கள் மீது நல்லெண்ணம் வைத்திருக்கும் பிற சமுதாய மக்களிடம் கூட இந்த விஷக் கருத்து ஒரு தவறான சிந்தனையைத் தோற்றுவிக்கின்றது.
முஸ்லிம்கள் அன்றும், இன்றும், என்றும் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்கள்; அவர்கள் அந்நியர்கள் அல்லர்; இந்த நாட்டுக்காக, இந்திய விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக "தேன்கூடு' என்ற வலைத்தளத்தில் ஷேக் மைதீன் என்வரால் பதியப்பட்ட இந்த ஆக்கத்தை வாசகர்களுக்குத் தருகின்றோம்.
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாகப் போரில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment