செய்தி
காவல்நிலையத்தில் விசாரணை கைதி சுடடுக்கொலை - கொலை செய்த உதவி ஆய்வாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவரது குடும்பத்திற்க்கு 50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்.
காவல்நிலையத்தில் விசாரணை கைதி சுடடுக்கொலை - கொலை செய்த உதவி ஆய்வாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவரது குடும்பத்திற்க்கு 50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வலியுறுத்தல்
காவல்நிலையத்தில் விசாரணை கைதி சையத் முஹம்மதுவை சுடடுக்கொலை செய்த உதவி ஆய்வாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது குடும்பத்திற்க்கு 50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வலியுறுத்தல்
இராமநாதபுரம் மாவட்டம் சுந்தர பாண்டியபுரத்தை சார்ந்த சையத் முஹம்மதுவை காவல் நிலையத்தில் அழைத்து, அங்கு உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது,
சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையினரே, சட்டத்தை கையில் எடுத்து சட்டத்தை மீறுவதும் தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்து என்கவுண்டர் என்று கூறுவது தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
இதற்கு முன் கானத்தூரில் விசாரனைக்கு அழைத்துவரப்பட்டவர் சுடப்பட்டார். விசாரனைக்கு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர் காவலரை தாக்கும் அளவுக்கு தைரியம் உடையவராக இருக்கமாட்டார். தாக்கியதாக சொல்லப்படும் நேரத்தில் மற்ற காவலர்கள் எங்கே போனார்கள்? காவல்துறை சொல்வது நம்பும்படி இல்லை. தற்காத்து கொள்ள சுடுவது சட்டத்தை மீறும் செயலாகும்.
தமிழக அரசு சையத் முஹம்மதுவை கொலைசெய்த உதவி ஆய்வாளர் காளிதாசனை நிரந்தர பணி நீக்கம் செய்து, அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். சையத் முஹம்மது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு
ஆா்.ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆா்.ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment