நீங்கள் பள்ளிப் படிப்பை சரியாகப் படிக்க முடியாமல் விட்டு விட்டோமே எனக் கவலைப் பட வேண்டாம்.
பத்தாம் வகுப்பு,மேல்நிலை வகுப்புப் படிப்புகளை ஆன்லைன் மூலமாகவும், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின் மூமாகவும் படிப்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது, நேஷனல் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆப் ஓபன் ஸ்கூளிங்க்.
மத்தியஅரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி வரும் அமைப்பு இது. பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டவர்கள் இந்த இன்ஸ்டிட்யுட் மூலம் படித்துத் தேர்வு எழுதி, சான்றிதழ்களைப் பெறலாம். கல்லூரிகளில் உயர்படிப்புகளுக்குச் செல்லும்போதும், வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும் குறிப்பிட்ட பாடங்களைப் படித்திருக்க வேண்டும்என்று விதிமுறைகள் இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில், அந்தப் பாடங்களை மட்டும் இந்த நிறுவனம் மூலம் படித்து,அவற்றில் தேர்ச்சி பெற முடியும்.
ஏற்கெனவே நீங்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி படிப்பு மற்றும் கல்லூரியில்பட்டப்படிப்பு படித்தவராக இருந்தாலும் பள்ளி நிலையில் மேலும் நான்கு பாடங்கள் வரை படித்துத் தேர்ச்சி பெற்று,திறனை மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட மையங்களில் தொழிற்பயிற்சிப் படிப்புகளையும்படிக்கலாம்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிப் படிப்பைப் படிக்க 16வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்புகளுக்கான புத்தகங்கள் இலவசம்.பதிவுக் கட்டணம் ரூ. 250. ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வுக் கட்டணம் ரூ.250. சான்றிதழ்களைப் பெற கட்டணம் ரூ.100.தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் படிப்பு மையம் உள்ளது.
No comments:
Post a Comment